by Staff Writer 19-05-2019 | 8:52 PM
Colombo (News 1st) பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த, வாக்குமூலமளிப்பதற்காக இன்று (19ஆம் திகதி) மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டாலும் அவர் வருகைதரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி இரவு மினுவாங்கொடையில் அமைதியின்மை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மதுமாதவ அரவிந்த அங்கு இருந்ததாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இன்று மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தராதமையால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.