ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக கோட்டாபய மீண்டும் தெரிவிப்பு

by Staff Writer 18-05-2019 | 7:16 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானித்ததாக அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்ததாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். அதற்காகவே அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.