இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய 12,299 பேர் சரண்

இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய 12,299 பேர் பொது மன்னிப்புக் காலத்தில் சரண்

by Staff Writer 18-05-2019 | 4:07 PM
Colombo (News 1st) அறிவிக்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலத்தில், இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய 12,299 பேர் மீண்டும் சரணடைந்துள்ளனர். கடமையில் இருந்து இடைவிலகிய இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்காக கடந்த 22 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் நேற்று (17) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பொது மன்னிப்புக் காலத்திற்குள் சரணடைந்த இராணுவ உறுப்பினர்களுக்கு இராணுவத்திடமிருந்து ஏதேனும் பணத்தொகை பெறப்பட வேண்டுமானால் அதை பெற்றுக்கொள்ள எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ அதிகாரி அல்லது உறுப்பினர் எவரும் சேவையில் இருந்து நீங்கி 180-க்கும் குறைவான நாட்கள் கடந்திருப்பின், அவர்களின் விருப்பத்திற்கேற்ப சட்டரீதியாக அவர்கள் மீண்டும் சேவையில் இணைந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என இராணுவத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.