Colombo (News 1st) உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க நியூஸ்ஃபெஸ்ட்டுடனான விசேட செவ்வியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
30 வருட யுத்தத்தின் போது அமுல்படுத்தப்பட்ட சட்டமொன்றுள்ளது. வெற்றியைப் பெறுவதற்கு அது போதுமானதாக இருந்தது. மாறுபட்ட தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஏதேனும் மாற்றங்கள், உள்ளடக்கங்கள், நீக்குதல்கள் இடம்பெறலாமே ஒழிய, சட்டத்தை முழுமையாக நீக்கி, வேறொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கான தேவை இல்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து. இதனை விடவும் சட்டத்தை வலுவானதாக மாற்ற முடியும். சட்ட நிபுணர்கள் தற்போது இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். எமது தகவல்களையும் நாம் அறிவித்துள்ளோம். எமது யோசனைகளையும் நாம் முன்வைத்துள்ளோம். இதன் ஊடாக வலுப்படுத்த வேண்டுமே அன்றி, ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப எமது நாட்டில் சட்டங்களைத் தயாரிக்க வேண்டிய தேவையில்லை.