by Staff Writer 09-05-2019 | 5:54 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தினுள் பிரவேசிப்பதற்கான 6 அனுமதிப்பத்திரங்களுடன் பலாங்கொடை - கிரிமெட்டிதென்ன பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரின் வீடு கடந்த 24 ஆம் திகதி சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான திட்ட வரைபடம், 2 ரவைகள், 13 சிம் கார்ட்கள் , 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் கடன் அட்டைகள் பலவும் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டியை சோதனைக்குட்படுத்திய போது, குறித்த கெப் வண்டியில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டது.
கிரிமெட்டிதென்ன பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.