மாளிகாவத்தையில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

by Staff Writer 08-05-2019 | 9:48 PM
Colombo (News 1st) கொழும்பு - மாளிகாவத்தை, கெத்தாராம மைதானத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அங்கிருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மருதானை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இன்று மாலை துறைமுக பொலிஸார், சுழியோடிகளின் ஒத்துழைப்புடன் கிணற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 30 அடி ஆழமான கிணற்றிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 46 புதிய வாள்கள், 12 பழைய வாள்கள், 52 கத்திகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 5 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நீர் புகாதவாறு பொதியிடப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் 15 கிராம் மற்றும் 26 இறுவட்டுகளும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய தினம் கைப்பற்றப்பட்ட இந்த வாள்கள், அண்மையில் பள்ளிவாசல்களில் கைப்பற்றப்பட்ட வாள்களை ஒத்தவை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஏனைய செய்திகள்