by Bella Dalima 07-05-2019 | 5:23 PM
மெக்ஸிகோவில் விமானம் வீழ்ந்து நொருங்கி விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கிளம்பிய தனியார் விமானத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, தொடர்பும் துண்டிக்கப்பட்டதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மெக்ஸிகோ வடக்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த விமானம் வீழ்ந்து நொருங்கி விபத்திற்குள்ளானது.
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை.