by Staff Writer 07-05-2019 | 7:10 PM
Colombo (News 1st) கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 13 வீடுகளும் 41 வங்கிக் கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவற்றை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாராளுமன்ற அமர்வில் இன்று மாலை கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறினார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விவாதிப்பதற்கான பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது.