by Staff Writer 01-05-2019 | 1:32 PM
Colombo (News 1st) தனியார் துறையில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாவிலிருந்து 12,500 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, தனியார் துறையில் நாளாந்த கொடுப்பனவு 400 ரூபாவிலிருந்து 500 ரூபா வரை அதிகரிப்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவிந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான சட்டமூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.