குண்டு துளைக்காத வாகனத்தை மறுத்ததாக கொழும்பு பேராயர் தெரிவிப்பு

by Bella Dalima 30-04-2019 | 8:40 PM
Colombo (News 1st) கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்றும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன்போது, அவர் தெரிவித்ததாவது,
எனக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளதாக தகவலொன்று பரவியுள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், எங்கும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்காவது செல்ல வேண்டும் எனின், பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் மாத்திரம் நான் பயணிக்கின்றேன். குண்டு துளைக்காத வாகனமொன்றை வழங்குமாறு நான் கேட்கவில்லை. ஏதேனும் வாகனமொன்று வந்தால் அதிலேறி நான் பயணிப்பேன். குண்டு துளைக்காத வாகனமொன்று வேண்டாம் என நான் கூறினேன். அதனை எடுத்துச் செல்லுமாறு கூறினேன். அந்த வாகனம் தற்போது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
என குறிப்பிட்டார்.