கேகாலையில் வயல்நிலங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

கேகாலை மாவட்டத்தில் வயல்நிலங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

by Staff Writer 29-04-2019 | 5:14 PM
Colombo(News 1st) கேகாலை மாவட்டத்தில் வயல்நிலங்களை விஸ்தரித்து செய்கையை முன்னெடுக்கவுள்ளதாக, விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், இதுவரை 2000 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தரிக்கப்பட்டு செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கும் விதைகளை இலவசமாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.