by Staff Writer 25-04-2019 | 7:11 PM
Colombo (News 1st) பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் தாம் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார்.
தமது அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகளால் இடம்பெற்றிருக்கக்கூடிய தவறுகளின் பொறுப்பை ஏற்று பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக ஹேமசிறி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் சில தவறுகள் இடம்பெற்றிருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.