by Staff Writer 10-04-2019 | 6:02 PM
Colombo (News 1st) சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடி, மின்னலுடன் கூடிய சுமார் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் எதிர்வரும் 8 மணித்தியாலங்களுக்குள் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையின் போது மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களில் எதிர்வரும் 8 மணித்தியாலங்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.