இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 10-04-2019 | 7:24 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கதிரவௌி, புச்சாங்கேணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கதிரவெளி பகுதியில் ஆரம்பமாகிய பேரணி வாகரை பிரதேச செயலகம் வரை சென்றதுடன், அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வாகரை - கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். பிரதேச செயலாளர் இது தொடர்பில் தீர்வு பெற்றுத் தருவதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.