காணிகள் எல்லைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் தனியார் காணிகள் எல்லைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

by Bella Dalima 09-04-2019 | 10:48 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் தனியாருக்கு சொந்தமான காணிகளை வனவளத் திணைக்களம் எல்லைப்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டினர். செம்மலை, கீச்சுக்குளம், கூழாமுறிப்பு, விசுவமடு உடையார்கட்டு, அம்மிமிரிச்சான் குளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலை காணப்படுவதாக மக்கள் குறிப்பிட்டனர். விவசாய நிலங்களும் இவ்வாறு எல்லைப்படுத்தப்பட்டுள்ளதால் தாம் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். யுத்தம் நிலவிய பகுதிகளில் பொதுமக்களின் காணிகள் காடுகளாகக் காணப்படுவதுடன், அதனை காரணம் காட்டி இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டுசென்ற போதிலும், எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குறிப்பிட்டனர்.