by Fazlullah Mubarak 07-04-2019 | 8:41 PM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கான ஆதரவு 16 வீதமாகக் குறைந்து, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகுவதற்கு 63 சதவீதமானோர் ஆதரவளிப்பார்கள் என கருத்துக் கணிப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ‘தேசிய நம்பிக்கை ஆய்வு’ கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக த ஹந்து செய்தி வௌியிட்டுள்ளது
மோடி ஆட்சியில் பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ள போதிலும், வேலைவாய்ப்பு வழங்கியதில் காங்கிரஸை விட பா.ஜ.க. மோசமான நிலையிலுள்ளதாகவும் கருத்துக் கணிப்பொன்றை மேற்கோள்காட்டி த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
'தி இந்து' ஆங்கில நாளிதழ், திரங்கா தொலைக்காட்சி, சிஎஸ்டிஎஸ் ஆகியவை இணைந்து கடந்த மாத இறுதி வாரத்தில் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தின.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 14.85 கோடி இந்திய ரூபா என அவர் வௌிப்படுத்தியுள்ளார்.
2018ஆம் ஆண்டில் ஒரு கோடி இந்திய ரூபாவிற்கு மேல் வருவாய் ஈட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விபரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
''ஏப்ரல் 11இல் வெளியாகும் பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தேர்தலைக் குறிவைத்ததல்ல'' என தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் தெரிவித்துள்ளார்.
''பிஎம் நரேந்திர மோடி'' பொலிவுட் திரைப்படம் தேர்தலுக்கு முன்னர் எதிர்வரும் 11ஆம் திகதி வௌியிடப்படவுள்ளது.
தேசத்தின் ஆன்மாவை பாரதிய ஜனதா கட்சி சிதைக்கிறது என ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரிவினையைத் தூண்டுகிறவர்கள் தங்களை தேசப்பற்றாளர்கள் என்று கூறுவதாக டெல்லியில் நேற்று உரையாற்றிய சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ துணைத் தளபதி சரத் சந்த் நேற்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்து கொண்டார்.
சரத் சந்த், கடந்த ஆண்டு ஜூன் முதலாம் திகதி இராணுவத்தின் துணைத் தளபதியாக ஓய்வு பெற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப்பண்பு ஊக்கம் அளிப்பதாக உள்ளதாகவும் இராணுவ வீரர்களின் நலனுக்கான திட்டங்களை பா.ஜ.க. அரசு அதிகம் செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.