by Staff Writer 05-04-2019 | 7:44 PM
Colombo (News 1st) மாத்தளை - கந்தேநுவர, பிட்டகந்தகம பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் குறைந்த வயதுடைய சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பிட்டகந்தகம பகுதியின் பிரதான வீதியில் இன்று அதிகாலை இந்த சிசு கைவிடப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சிசு மீட்கப்பட்டு, மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த பகுதியில் இன்று அதிகாலை முச்சக்கரவண்டி ஒன்று பயணித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.