இலங்கை மின்சார சபைக்கு அழைப்பாணை

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்குத் தெரியாமல் எவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டது: இலங்கை மின்சார சபைக்கு அழைப்பாணை

by Staff Writer 02-04-2019 | 8:31 PM
Colombo (News 1st) மின் துண்டிப்பு தொடர்பான அறிக்கையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு வழங்காமைக்கான காரணங்களை முன்வைப்பதற்கு எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை மின்சார சபைக்கு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவினால் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் மின் துண்டிப்பு தொடர்பான ஆவணம் தமக்கு வழங்கப்படவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு முறைப்பாடு செய்துள்ளது.