பொறியியலாளர் சம்பள அதிகரிப்பு:சுற்றுநிரூபம் இரத்து

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிரூபம் இரத்து

by Staff Writer 02-04-2019 | 10:19 PM
Colombo (News 1st) இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களின் சம்பளத்தை பெருமளவு அதிகரித்து 2014 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி இலங்கை மின்சார சபையினால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்தை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று எழுத்தாணை பிறப்பித்துள்ளது. அந்த சுற்றுநிரூபம் தவறானது என தீர்மானித்தே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மனுதாரர் தரப்பிற்கு இரண்டு இலட்சம் ரூபா வழக்குப் பணத்தை செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டார். இலங்கை மின்சார சபையின் பொதுச்சேவை சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.