by Staff Writer 31-03-2019 | 1:42 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த நீர்வெட்டு, மேலும் சில மணித்தியாலங்களுக்கு நீடிக்கும் என, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
திருத்தப்பணிகள் காரணமாக நேற்று (30ஆம் திகதி) காலை 9 மணிமுதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
கோட்டை, புறக்கோட்டை, வௌ்ளவத்தை, பம்பலப்பிட்டி, பொரளை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இன்று (31ஆம் திகதி) காலை 9 மணிக்கு நீர்வெட்டு வழமைக்குத் திரும்பும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், திருத்தப்பணிகள் இதுவரை நிறைவடையவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் அலாவுதின் அன்சார் தெரிவித்துள்ளார்.