by Staff Writer 31-03-2019 | 8:03 AM
Colombo (News 1st) Update: வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாளைய தினம் (முதலாம் திகதி) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டு திமுத் கருணாரத்ன பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையுடன் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை, கிங்ஸி சந்தி பகுதியில் இன்று (31ஆம் திகதி) அதிகாலை 5.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவர், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் திமுத் கருணாரத்ன மதுபோதையுடன் காணப்பட்ட காரணத்தை அவரைக் கைது செய்துள்ளதாக, பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.