by Staff Writer 30-03-2019 | 6:03 PM
Colombo (News 1st) வௌிநாட்டு தூதுக்குழுக்களின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்ட வௌிநாட்டுத் தூதுவர்கள் 14 பேருக்கான உயர் பதவிகளுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கான வௌிநாட்டு சேவையில் முதலாம் தரத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளே தூதுவர்கள் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக கே.டீ.செனவிரத்னவும், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக ரொட்னி பெரேராவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய சங்கத்திற்கான இலங்கை தூதுவராக குரோஸ் ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வௌிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளராக பணிபுரிந்த சரோஜா சிறிசேன, அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக சசிக்கலா பிரேமவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய நியமனங்களுக்கு அமைய, 36 வீதமாகக் காணப்பட்ட வௌிநாட்டு தூதுவர்களின் எண்ணிக்கை 46 வீதமாக அதிகரித்துள்ளதாக வௌிநாட்டலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.