by Bella Dalima 30-03-2019 | 4:10 PM
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் இராமநாதபுரத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இதன்போது, தமிழக மீனவர்கள் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என கூறியுள்ளார்.
அதற்காக இரு நாட்டு கடலோர பகுதிகளிலும் நெருக்கடி மேலாண்மை மையம் உருவாக்கப்படும் எனவும் மீனவர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீளப்பெற வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.