புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய ஜனாதிபதி தீர்மானம்

by Staff Writer 25-03-2019 | 9:39 PM
Colombo (News 1st) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (25ஆம் திகதி) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவோரில் பெரும்பாலானவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அல்லர் என்பது தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 14 வீதமான மாணவர்களே பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடர்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.