Colombo (News 1st) 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேலும் 2 வருடங்கள் கால அவகாசம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.