by Bella Dalima 20-03-2019 | 4:49 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் வானில் ஏற்பட்ட பிரம்மாண்ட துளையைக் கண்ட மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அல் ஐன் (Al ain) நகரில் வானில் திடீரென சுழல்போன்ற துளை தென்பட்டுள்ளது. இதனைக் கண்ட மக்கள் சிலர் மற்றொரு உலகிற்கான வாயில் என வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் இதுபோன்று நிகழும் என வானிலை ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.