by Fazlullah Mubarak 18-03-2019 | 1:44 PM
நியூஸிலாந்து கிரைஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் ஒருகட்டமாக, அவுஸ்திரேலியாவில் இரு வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
கிரைஸ்ட்சர்ச்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் அவுஸ்திரேலியா சிட்னியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.