மன்னார், வவுனியாவில் நாளை வெப்பமான வானிலை நிலவும்

மன்னார், வவுனியாவில் நாளை வெப்பமான வானிலை நிலவக்கூடும்

by Staff Writer 13-03-2019 | 6:55 PM
Colombo (News 1st) வடமேல் மாகாணத்திலும் அநுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் நாளை (14) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வெப்பமான வானிலை தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு அறிக்கையொன்றினூடாக வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிகளவில் நீர் அருந்துமாறும் சிறுவர்கள், முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அநுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 34 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், கண்டி மற்றும் மன்னாரில் 33 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டங்களில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளன.