56 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

56 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

by Staff Writer 12-03-2019 | 3:18 PM
Colombo (News 1st) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 56 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. பொலிஸ் தரைப்படை தலைமையகம், மினுவங்கொட, குளியாப்பிட்டி, வத்தளை, லக்கல எஹலியகொட, கிளிநொச்சி, கல்தொட்ட, கொஸ்கொட, மானிப்பாய், வெலிஓய, பொத்துஹர, உடவளவ, மாரவில, வெலிபென்ன, மீகஹவத்த உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பஹா, கொழும்பு மத்திய பிரிவு உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.