பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக அனுப்பப்படுவதை எதிர்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 08-03-2019 | 7:26 PM
Colombo (News 1st) பெண்கள் வௌிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்பப்படுவதை தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முதலாளித்துவ வர்க்கத்தினரும் சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் வௌிநாட்டு பணிப்பெண்கள் நாட்டிற்கு ஈட்டித்தரும் நிதியின் மூலமே சுகபோகங்களை அனுபவிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ''திறமையான பெண்கள், அழகான உலகம்'' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 800-இற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். 2019 - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரகடனம் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.