துண்டுவிழும் தொகை 685 பில்லியன் ரூபா

வரவு செலவுத் திட்டம் 2019: துண்டுவிழும் தொகை 685 பில்லியன் ரூபா

by Staff Writer 05-03-2019 | 9:00 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகக் காணப்படுகின்றது. இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2464 பில்லியன் ரூபாவாகும். அரசாங்கத்தின் இந்த வருட செலவு 3149 பில்லியன் ரூபாவாகும். அதற்கமைய 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை 685 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது. இந்த வருடம் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக மாத்திரம் 913 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மொத்த வருமானம் நிகர தேசிய உற்பத்தியில் 15.8 வீதமாக உயர்வடைந்துள்ளது. அரசாங்கத்தின் மொத்த செலவு நிகர தேசிய உற்பத்தியில் 20.2 வீதமாகும். நிகர தேசிய உற்பத்தியில் 4.4 வீதமாக வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை காணப்படுகின்றது. கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக இது வீழ்ச்சியடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.