by Staff Writer 24-02-2019 | 8:08 AM
Colombo (News 1st) விவசாயத் திணைக்களத்தின் ''பழங்கள் கிராமங்கள்'' வேலைத்திட்டத்தின் கீழ், ரம்புட்டான் செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், மலேஷிய சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரம்புட்டான் உள்ளிட்ட பல வகைகளை சேர்ந்த ரம்புட்டான்களை உற்பத்தி செய்யவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.