அசாமில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 80 பேர் பலி

அசாமில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 23-02-2019 | 7:19 PM
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 300 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 32 பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (22) உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது பெண்கள் உட்பட 85 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாமின் Golaghat பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் நூறு பேர் வரை சட்டவிரோத மதுபானம் அருந்தியுள்ளதுடன், நோய்வாய்ப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அசாமில் இரண்டு வாரங்களில் சட்டவிரோத மதுபானம் அருந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.