பூசணிக்காய்களை இலவசமாக வழங்கிய விவசாயிகள்

கொழும்பில் பூசணிக்காய்களை இலவசமாக மக்களுக்கு வழங்கிய அநுராதபுரம் விவசாயிகள்

by Staff Writer 22-02-2019 | 5:49 PM
Colombo (News 1st) கொழும்பில் இன்று இலவசமாக பூசணிக்காய்கள் வழங்கப்பட்டன. அநுராதபுரம் மாவட்ட விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற்றமையால், அவற்றினை சந்தைப்படுத்த முடியாத நிலையில் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர். சர்வோதய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புகள் இணைந்து பூசணிக்காயை மக்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் பிரபல சமையல் நிபுணர் பப்லிஸ் சில்வாவும் இணைந்து கொண்டார்.