by Staff Writer 20-02-2019 | 7:34 PM
Colombo (News 1st) போதைப்பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.
சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இரான் விக்ரமரத்ன, ஆஷூ மாரசிங்க, நிஸ்ஸங்க நாணயக்கார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அமைச்சரவையில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.