சுகாதார அமைச்சை ஜனாதிபதி தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

by Bella Dalima 19-02-2019 | 7:43 PM
Colombo (News 1st) சுகாதார அமைச்சை ஜனாதிபதி உடனடியாக தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சர் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கோப் குழு இது தொடர்பில் விரைவில் வெளிப்படுத்தும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மேலதிக செயலாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டார். உயர் தரத்தில் கூட சித்தியடையாத, வெளிநாட்டில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கு பல்வேறு மறைமுக அழுத்தங்கள் விடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, உடனடியாக சுகாதார அமைச்சை ஜனாதிபதி தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என நலிந்த ஹேரத் வலியுறுத்தினார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜனாதிபதியிடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.