சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 17-02-2019 | 6:34 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வட மாகாணத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 02. அர்ஜூன மகேந்திரன், மதூஷையும் அரசாங்கம் ஒரே விதமாகப் பார்ப்பதாகவும் இருவருக்கு எதிராகவும் சிவப்பு அறிவித்தல் பெறாது பொலிஸார் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுவதாகவும் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். 03. அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை அந்நாட்டு சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார். 04. நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் இலங்கையில் கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருவதாக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் கலாநிதி Hartwig Schafer பாராட்டு தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லைச்சுவரை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை காங்கிரஸின் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளும் நோக்கில், நாட்டில் அவசரகால நிலையை அமெரிக்க ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். 02. நைஜீரியாவின் வட மேற்கு பிராந்தியத்தில் 66 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுச் செய்தி 01. தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்டால் வெற்றியீட்டியது.