துபாயில் கைதானோரில் 16 பேர் போதைப்பொருள் பாவித்திருக்கவில்லை என தகவல் 

by Staff Writer 16-02-2019 | 3:44 PM
Colombo (News 1st) துபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமல் பெரேரா மற்றும் நதிமால் பெரேரா ஆகியோர் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை அந்நாட்டு சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் மீதான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக துபாய் பொலிஸாரால்  அவர்களின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகளின் அறிக்கைகள் பெறப்படவுள்ளதாக சட்டத்தரணி நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு குறிப்பிட்டார். சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தாம் அவர்களைப் பார்வையிட சென்றதாகவும் சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்பிலி கூறினார். எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் குறித்த இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 16 பேர் போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை என தகவல்கள் வௌியாகியுள்ளதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்தார். 31 சந்தேகநபர்களும் கடந்த 4 ஆம் திகதி இரவு கொக்கைன் போதைப்பொருளுடன், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.