திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 05-02-2019 | 5:50 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பீல்ட் மார்ஷல் பதவிக்கு மதிப்பளிக்கப்படாத அணிவகுப்பிற்கு, இராணுவ சம்பிரதாயம் மற்றும் ஒழுங்கு மீறப்படும் இடத்திற்கு, பீல்ட் மார்ஷல் என்ற வகையில் என்னால் சென்று நிற்கமுடியாமையால் நான் அங்கு செல்வதைத் தவிர்த்தேன் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 02. மாலியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றிய இலங்கை இராணுவ வீரர்கள் இருவரின் பூதவுடல்களும் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 03. 71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு 545 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 04. இலங்கையின் 71 ஆவது தேசிய தின கொண்டாட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெற்றது. 05. புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், வீடொன்றின் மீது சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானி உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 02. மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக, ஊழலுக்கு எதிரான வேட்பாளர் நயீப் புகெலே (Nayib Bukele) உரிமைகோரியுள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. ஸ்போட்ஸ் பெஸ்ட் – அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் 20ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் கேகாலையில் முன்னெடுக்கப்பட்டது. 02. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஷேர்ன் வோர்ன் - முரளிதரன் வெற்றிக்கிண்ணத்தில் நான்காவது தடவையாகவும் அவுஸ்திரேலியா சம்பியனானது.