by Staff Writer 05-02-2019 | 4:42 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவிற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் திமுத் கருணாரத்ன தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த குழாத்தில் நிரோஷன் திக்வெல்ல உபதலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
இதுவரைகாலமும் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக செயற்பட்ட தினேஸ் சந்திமாலுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
அறிமுக வீரர்கள் பலருக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஞ்சலோ பெரேரா, ஓசத பெர்னாண்டோ, லசித் அம்புல்தெனிய , மிலிந்த சிறிவர்தன, மொஹமட் சிராஷ் ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியத் தொடரில் பெயரிடப்பட்டிருந்த சதீர சமரவிக்கிரம, ரொஷேன் சில்வா, டில்ருவன் பெரேரா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி டேர்பனில் ஆரம்பமாகவுள்ளது.