சோளம்,மரமுந்திரிகை இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம்

சோளம், மரமுந்திரிகை இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் நிறுத்தம்

by Staff Writer 03-02-2019 | 1:59 PM
Colombo (News 1st) சோளம் மற்றும் மரமுந்திரிகை ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சோளம் மற்றும் மரமுந்திரிகை ஆகியன உள்நாட்டு சந்தையில் போதுமானளவு காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். அத்துடன், உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியும் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான 10 ரூபா வரி 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாசிப்பயறு மற்றும் ஏனைய தானிய வகைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையையும் நிறுத்துவது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.