நுவரெலியாவின் திறமையான வீரராக கசுன் கௌசல்ய தெரிவு

பிளாட்டினம் விருதுகள்: நுவரெலியா மாவட்டத்தின் திறமையான வீரராக கசுன் கௌசல்ய தெரிவு

by Staff Writer 31-01-2019 | 10:09 PM
Colombo (News 1st) தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை வீர வீராங்கனைகளை கௌரவிப்பதற்கு ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் மற்றும் Allianz நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் ஊக்குவிப்புத் திட்டத்தின் 16 ஆவது கட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் - Allianz பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் ஊக்குவிப்பு திட்டம் நுவரெலியா மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று காலை ஆரம்பமானது. நுவரெலியா உதவி கல்வி பணிப்பாளர் சுசந்த வீரசேன, நுவரெலியா மகளிர் மகா வித்தியாலய அதிபர், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் Allianz நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளின் பங்கேற்புடன் ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பேஸ் போல், கால்பந்தாட்டம் மற்றும் ரக்பி விளையாட்டுக்களும் பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. நுவரெலியா மாவட்டத்தின் திறமையான வீரருக்கான பிளாட்டினம் தங்க விருதை ஹங்குரன்கெத பள்ளியபோவெல பாடசாலையின் குத்துச்சண்டை வீரர் கசுன் கௌசல்ய பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த ஊக்குவிப்புத் திட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுடரேந்திய வாகனம் நுவரெலியாவில் இருந்து கண்டியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.