விமல் வீரவங்ச CID இல் ஆஜர்

விமல் வீரவங்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

by Staff Writer 28-01-2019 | 4:35 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகினார். பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதுடன், சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், நண்பகல் 12 மணியளவில் திணைக்களத்திலிருந்து வௌியேறியுள்ளார்.