by Staff Writer 18-01-2019 | 8:40 PM
Colombo (News 1st) பாரிய கடன் சுமையை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட எயார் பஸ் A302 - 200 விமானம் எவ்வித பயன்பாடும் இன்றி காணப்படும் நிலைமை தொடர்பில் அண்மையில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியது.
அது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக ஸ்ரீலங்கள் விமான சேவை அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
2016 ஆம் ஆண்டு A 350 விமானத்திற்கான கோரிக்கையை இரத்து செய்வதற்கு எடுத்த தீர்மானமும், அதன்போது செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய A 330 - 200 விமானத்தை கொள்வனவு செய்வதற்கு எடுத்த தீர்மானமும் நிறுவனத்தின் தற்போதைய வியாபார வியூகத்திற்கு பொருந்துவதில்லையென நிறுவனத்தின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
எவ்விதப் பயனுமற்ற A 330 விமானத்தை கடந்த முகாமைத்துவத்தினால் வேறு ஒரு விமான சேவைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கினாலும், குறித்த நிறுவனம் அந்தக் கொடுப்பனவை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் நட்டத்தை ஈடு செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய முகாமைத்துவம் எடுத்து வருவதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடம்மாறும் விமான சேவை அல்லது வேறு விமான நிறுவனமொன்றுக்கு விமானத்தை குத்தகைக்கு விடுவதற்கான இயலுமை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களின் பணத்தை வீணாக செலவு செய்யும் இவ்வாறான திருடர்களை வெளிக்கொணரும் ஊடகம் கறுப்பு ஊடகம் என்றால், இவ்வாறான கொடுக்கல் வாங்கலின் பின்புலத்தில் உள்ள நபர்கள் திருட்டு யானைகள் அல்லவா?