by Staff Writer 15-01-2019 | 8:53 PM
Colombo (News 1st) யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சட்டவிரோத கேபிள் இணைப்புகள் நேற்று (14) அகற்றப்பட்டன.
சட்டவிரோத கேபிள் இணைப்புகளை அகற்றுவதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்போது, சட்டவிரோத கேபிள் இணைப்புகளுடன் வீதியோரங்களில் அதற்கென நாட்டப்பட்டிருந்த கம்பங்களும் அகற்றப்பட்டன.
யாழ். மாநகர மேயர் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்டின் இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது.
சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு யாழ். மேயர் எடுக்கும் இவ்வாறான முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.