போதைப்பொருள் விற்பனைக்கு இடமளிக்க வேண்டாம்

பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனைக்கு இடமளிக்க வேண்டாம்: ஜனாதிபதி அறிவுறுத்தல்

by Staff Writer 10-01-2019 | 5:56 PM
Colombo (News 1st) பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் விற்பனைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கட்டுப்படுத்துதல் மற்றும் பாவனையைக் குறைத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பல் நடைபெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.