by Staff Writer 09-01-2019 | 8:54 PM
Colombo (News 1st) ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரான ஜனக ரணவக்கவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை அடுத்த மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி கோட்டே மாநகர சபையின் மேயராக இருந்தபோது, பிரதி மேயராகவிருந்த சட்டத்தரணி மதுர வித்தானவின் கணனிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி மஞ்சுள திலகரத்ன பிரதிவாதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வாசித்தார்.
எனினும், ஜனக ரணவக்க மற்றும் கணனி கட்டமைப்பிற்கு பொறுப்பாகவிருந்த பிரியந்த வலவே ஆகியோர் தாம் சுற்றவாளிகள் என தெரிவித்துள்ளனர்.