சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

by Staff Writer 06-01-2019 | 11:54 AM
Colombo (News 1st) சமையல் எரிவாயுவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு, சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கோரிக்கை, வாழ்க்கைச் செலவு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பில், நுகர்சோர் விவகார அதிகாரசபையிடம் நாம் வினவியபோது, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான தேவையில்லை என சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சர்வதேச சந்தைகளில் சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதேவேளை, சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கிவைத்துள்ள விற்பனையாளர்களை கைது செய்வற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.