by Fazlullah Mubarak 06-01-2019 | 8:21 PM
ஊடக சுதந்திரம் தொடர்பில் சமூகத்தில் மீண்டும் அதிகம் பேசப்படும் நிலையில், இலங்கை வாழ் மக்களுக்கு ஒரு போது மறக்கமுடியாத சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
எம்.ரீ.வி. எம்.பீ.சி ஊடக வலையமைப்பு மீதான தாக்குதலை எவராலும் ஒருபோதும் மறக்க முடியாது.
அதனபின்னர் இடம்பெற்ற பல சம்பவங்கள் நாட்டு மக்களின் தகவல் அறியும் சட்டத்திற்கு விடுத்த பாரிய அச்சுறுத்தலாக அமைந்தது.
எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
2009 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி
எம்.ரீ.வி. எம்.பீ.சி ஊடக வலையமைப்பின் தெபானம கலையகத்தில், ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் வழமைபோன்று கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலை 2.10 மணியளவில் திடீரென கலையகத்திற்குள் குண்டர்கள் குழு அத்துமீறி நுழைந்தது.
அவர்கள் இலக்கத் தகடு அற்ற வெள்ளை வேனில் வந்திருந்தனர்.
குண்டர்கள் குழு முதலில் காவலரனில் இருந்த அதிகாரிகளை பணயக் கைதிகளாக வைத்துக்கொண்டு பிரதான கலையகத்தை முதலில் இலக்கு வைத்தனர்.
தன்னியக்க கணினி கட்டமைப்பைக் கொண்ட எமது கலையகம் தெற்காசியாவிலே அதி நவீன நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருந்தது.
நவீன வசதிகளுடன் கலையகம் திறக்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே இந்தத் தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் தாக்குதலுக்காக கிளைமோர் குண்டு கூட பயன்படுத்தப்பட்டமை பின்னர் தெரியவந்தது.
8 கிலோகிரோம் எடை கொண்ட கிளைமோர் குண்டு ஒன்றை பிரதான கலையகத்தில்
வெடிக்க வைக்கத் திட்டம் தீட்டயிருந்தாக அரச பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்தது.
எனினும், இயற்கை அதற்கு இடமளிக்கவில்லை என்பதுடன், அந்தக் கிளைமோர் குண்டின் ஒரு பகுதி மாத்திரமே வெடித்தமை பின்னர் வெளியானது.
அனைத்தும் சாம்பலாகிய போதிலும், ஒரு சில மணித்தியாலங்களில் மக்களுக்காக மீண்டெழுந்தோம்.
மக்களின் தகவல் அறியும் உரிமையை கிளைமோர் குண்டுகளால் அழிக்க முடியாது என்பதனை எடுத்துக் காட்டும் வகையில் மீண்டெழுந்தோம்.
எம்மை வீழ்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும், மக்கள் எம்முடன் இருந்தமையினால் அவற்றை முறியடிக்க முடிந்தது என்பது தெளிவானது.
தெபானம கலையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 48 மணித்தியாலங்களின் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லஸந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்.
இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியானாலும், இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதனை அவர் அவரின் மனசாட்சிகளே அறியும்...