by Staff Writer 31-12-2018 | 6:30 PM
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றிப்பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் பிரதமர் ஷேக் ஹசீனா மூன்றாவது தடவையாகவும் பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் 350 ஆசனங்களில், ஷேக் ஹசீனாவின் கூட்டணி 281 ஆசனங்களை பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ,தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சிகள் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
தேர்தலின் போது இடம்பெற்ற வன்முறைகளில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
2014 இல் நடைபெற்ற தேர்தலை, பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அனைத்து முக்கியக் கட்சிகளும் போட்டியிடும் தேர்தலாக நேற்றைய பொதுத் தேர்தல் அமைந்தது.